பைத்தூர் 50 அடிகிணற்றில் தவறிவிழுந்த2காட்டு பன்றிகள் மீட்பு

60பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் வனப்பகுதியில் அதிகளவில் மான், மயில் , காட்டுபன்றிகள் உள்ளன. இன்று பைத்தூர் கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்பவரது 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் இரண்டு காட்டு பன்றிகள் தவறி விழுந்துள்ளது. அதையறிந்த அப்பகுதி விவசாயிகள், ஆத்தூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி