தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. விடுமுறை நீட்டிக்கப்படவுள்ளது என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலையடுத்து இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.