பெருகும் இணையவழிக் குற்றங்களில் இணையம் மூலமான வணிகமும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இணையம் மூலம் பொருள்கள் வாங்குவதும், அதில் ஏமாறுவதும் தொடர்கதையாகவே நடக்கிறது. இதில் குறைந்த அளவிலான பணத்தை இழப்பவர்கள் பெரும்பாலும் வெளியே சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இணையவழி வணிகத்தில் ஏமாறுபவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகம் வழியாகவே ஏமாறுகிறார்கள். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் நம்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.