சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார். இவர் நேற்று (டிசம்பர் 30) வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் வீட்டில் சமையலறை பகுதியில் சென்றபோது ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த அவர் சென்று பார்க்கும்போது பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடிய பின் நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அது வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு காப்புக்காட்டில் விடப்பட்டது.