ஆத்தூர் கடையில் ரூ. 10 ஆயிரம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி

62பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் பிரபலமான பாத்திரக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மாரிமுத்து தெருவில் வசித்து வரும் ராஜவடிவேல் என்பவர் இரவு வாட்ச்மேன்
வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு வந்த ராஜவடிவேல் தனது பாக்கெட்டில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை டிராவில் வைத்துவிட்டு இரவு பணியாற்றி வந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் வாட்ச்மேன் அங்கிருந்த டேபிள் மேல் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது டிராவில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடி காட்சிகளை ஆய்வு செய்தபோது
அதிகாலை 5 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வாட்ச்மேன் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்து டேபிளில் இருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை லாபமாக திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் டிராவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி