விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அங்கீகாரம் பெறாத, பதிவுச் சான்றிதழ் இல்லாத தர்பூசணி, கிர்ணிப் பழ விதைகளை வாங்கக்கூடாது என்று விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் தர்பூசணி மற்றும் கிர்ணிப்பழ விதைகளை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.