2025 ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவே செயல்படுவார் என மும்பை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அல்லது ரோஹித் ஷர்மா ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என பரவி வந்த வதந்திகளுக்கு மும்பை அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சென்ற வருடம் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது மும்பை ரசிகர்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.