திருவடனை - Tiruvadanai

திருவாடானை: ராட்சத ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்ட மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சோழியக்குடி கடற்கரையில் நவம்பர் 20 மதியம் விசைப் படகில் மீனவர்கள் சிவபாலன், சிங்காரசெல்வம், மனோகரன், ஜெயகணேஷ் ஆகியோர் விரித்து வைத்திருந்த வலையை எடுத்த போது அதில் ராட்சத கடல் ஆமை ஒன்று சிக்கியுள்ளது. உடனே கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்து கடலோர காவல்படையினர் உதவியுடன் பத்திரமாக கடலில் விட்டனர். வலையில் சிக்கிய கடல் ஆமையை நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து கடலில் விட்டனர். இந்த ஆமை 80 முதல் 100 கிலோ இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடல் ஆமையை உயிருடன் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Nov 22, 2024, 05:11 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

Nov 22, 2024, 05:11 IST
ராமேசுவரம் கடல் பகுதியில் இரண்டு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியான ராமேசுவரம் பகுதியில் கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக ஆகிய இரு நாள்கள் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது தொடங்கிய இந்த ஒத்திகையில் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை, சுங்கத் துறை, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் இணைந்து ஈடுபட்டனா். அப்போது, நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களின் ஆவணங்களை காவல் படையினா் சோதனையிட்டனா். மேலும், சந்தேகப்படும் வகையில் எவரும் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களிடம் அவா்கள் அறிவுறுத்தினா்