உருவாட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ உருவாட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும் சிறிய மாடு பிரிவில் 16 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றன.
மாட்டுவண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் தங்களது காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு குத்துவிளக்கு, ரொக்க பணம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தினை சாலையின் இரு புறங்களில் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.