இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1, 374 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதன்படி சக்கரக்கோட்டை ஊராட்சி மேலச்சோத்தூரணி நூலக கட்டடம், வாணி, காரிக் கூட்டம் தொடக்கப்பள்ளி வளாகங்களில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவள்ளி பார்வையிட்டார்.