மாற்றுத்திறனாளி சாலை மறியல் ஈடுபட்டது பரபரப்பு

59பார்த்தது
திருவாடானை அருகே 50 வருடமாக அடிப்படை வசதிகள் இல்லை. மாற்றுத்திறனாளி சாலை மறியல் ஈடுபட்டது பரபரப்பு நிலவியது
     
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னஅஞ்சுகோட்டை கிராமம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், சாலை வசதிகள் கடந்த 50 வருடத்திற்கும் மேலாக இல்லை எனக் கூறி இன்று மாற்றுத்திறனாளி  கார்த்தி என்பவர் தனது மாற்றுத்திறனாளி வாகனம் மற்றும் படுக்கையுடன் அஞ்சு கோட்டையில் இருந்து மங்களக்குடி செல்லும் சாலையில் சின்ன அஞ்சுகோட்டை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உடன்  திருவாடானை காவல் துறை சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்தி அடிப்படை வசதி செய்து தர உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறியதையடுத்து திருவாளனை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  
    ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்  வருவதாக கூறி காலம் கடத்தி வருவதால் தற்போதுவரை போராடம் தொடர்ந்து வருவதால் அங்கே பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து போராட்டம் நீடித்து வண்ணம் உள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி