திருவாடானை நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக நீதிபதிகள் நிர்மல் குமார் , நீதிபதி மாலா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தற்போது நீதிபதிகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசன செய்தார்கள். உடன் மாவட்ட நீதிபதி பிரசாத், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மனிஷ் குமார் மற்றும்திருவாடானை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்