மருத்துவரே இல்லாத மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு

65பார்த்தது
மருத்துவரே இல்லாத மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் உள்ள மருத்துவர்கள் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில் திருவாடானையில் மருத்துவர் இல்லாத மருத்துவமனைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான  புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி வரும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
     அதன் படி திருவாடானை அரசு மருத்துவமனைக்கும் ஒரு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர் என இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதில் என்ன வேடிக்கை என்றால் 12 மணிக்கு மேல் மருத்துவர் மருத்துவமனையில் இருக்க மாட்டார். 12 மணிக்கு மேல் மருத்துவர் இல்லா மருத்துவமனைக்கு பாதுகாப்பு வழங்கி வருவது வேடிக்கையாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்களே இல்லை எனவும் சொல்லப்படுகிறது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி