அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கைஎடுக்ககோரி சாலை மறியல்

61பார்த்தது
திருவாடானை அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் ஈடுபட்ட  மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் இவரை நேற்று இதே பகுதியைச் சேந்த சூர்யா உள்ளிட்ட வர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் நிலையில், குருந்தங்குடி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தேவகோட்டையில் இருந்து மங்களக்குடி செல்லும் சாலையில் குருந்தங்குடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனால் போக்குவரத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் பாதிக்கப்பட்டது.
     தகவல் அறிந்து அங்கு வந்த திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் ஏற்கனவே குருந்தங்குடி சூர்யா, ஊரணிக்கோட்டை அண்ணாத்துரை
ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் குற்றவாளிகளை தேடி வருவதாகவும், இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் எனவும் கூறியதை  அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி