
வாராப்பூர் அருகே ரூ. 2000க்கு ஏலம் போன ராட்சத பழம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனை ஒட்டி விவசாயிகள் நாள்தோறும் தங்களது தோட்டங்களில் விளைந்த பலாப்பழங்களை வடகாடு மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் விற்பனைக்காக வைத்திருந்த 40 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் பலாப்பழத்தை போட்டி போட்டு வியாபாரி ஒருவர் 2000 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்.