

ஆலங்குடி: கடும் பனியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள்..
ஆலங்குடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்வாட்டி வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 1) அதிகாலை தொடங்கிய கடும் மூடுபனி, ஒன்பது மணிக்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை செய்து வருவது ஆலங்குடி பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றது.