புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பலத்த மழை காரணமாக சாம்பிராணி குளம் நிறைந்து குடியிருப்பு பகுதியில் மற்றும் விளைநிலங்கள் பகுதியில் மழைநீர் சென்று கொண்டிருக்கிறது. சாம்பிராணி குளம் வரத்து வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாத காரணத்தால் நீர் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்கள் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது. எனவே குளத்தை தூர்வார வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.