புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்குதளங்கள் உள்ளன. இங்கு 600 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது கோட்டைப்பட்டினம் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்குதளத்திற்கு ரூ. 10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மீனவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.