பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி!

81பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாங்கனாம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இந்த போட்டியினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வி மெய்ய நாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் புதுகை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர் முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது அதனை தொடர்ந்து முதல் காலையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது இதனை தொடர்ந்து பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களை அந்தரத்தில் சுழல விட்டதை ஊர் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து மகிழ்ந்தனர் மங்கனாபட்டி ஊர் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர் போட்டியில் 650 மாடுகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி