புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆலங்குடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 4 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கசாமி தலைமையில் சீல் வைக்கப்பட்டது.