புதுவை: அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற National Maritime Domains Awareness நிகழ்ச்சியில் காரைக்கால் V. O. C. அரசு பெண்கள் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜானவி தேர்வு செய்யப்பட்டு சுனாமி விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இந்த மாணவியை புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் அவர்கள் மாணவி மற்றும் பெற்றோர்களை நேரில் அழைத்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.