காரைக்கால் நலவழித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: - காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய் தொற்றுகள் காணப்பட்டது. இவை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டதற்கு உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பினால் மட்டுமே சாத்தியம் ஆனது. குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலப்பு இருப்பது தெரியவந்தால் உடனே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தண்ணீரை எப்பொழுதும் காய்ச்சி குடிப்பதும் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு பிறகு உணவு உட்கொள்வது இத்தகைய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். நாம் அனைவரும் புதிதாக செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்வதும் தண்ணீரை காய்ச்சி குடிப்பதும் பழைய உணவுகளை தவிர்ப்பதும் சிறந்தது.