மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவியை சக மாணவர்களான நூர் முகமது மற்றும் சத்யம் ஆகியோர் கடந்த அக்டோபரில் கல்லூரி வளாகத்தில் வைத்து சீரழித்தனர். குற்றவாளிகளை போலீசார் அண்மையில் கைது செய்தனர். இந்த நிலையில் பாஜகவின் மாணவர் பிரிவான ABVP சார்பில் நேற்று (நவ. 04) கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.