திருநள்ளாறில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்ய அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் நடை திறப்புக்கு முன்பே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.