ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் போதைக்கு அடிமையானவராக இருந்தார். இந்நிலையில் கடந்த நவ. 15-ஆம் தேதி, 13 வயதான தனது மூத்த மகளை அவர் சீரழித்துள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர் 11 வயதான இளைய மகளையும் பலாத்காரம் செய்திருக்கிறார். இது குறித்து குற்றவாளியின் மனைவி போலீசில் புகாரளித்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் (நவ. 17) அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.