திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சிறுமி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த சிறுமியை தலைமை ஆசிரியர் தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அப்போது அழுததால் தன்னை விட்டுவிட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதுவரை வழக்கு எதுவும் பதியப்படவில்லை.