ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியலின முன்னேற்றத்திற்கு அரியதொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் – 621212- என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.