வால்பாறை - Valparai

வால்பாறை: மலைப்பாதையில் சிறுத்தை உலா!

வால்பாறை: மலைப்பாதையில் சிறுத்தை உலா!

கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வரும் வழியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே, இரவு நேரத்தில், சிறுத்தை ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதை, சுற்றுலா பயணியர் சிலர் புகைப்படம் எடுத்து நேற்றைய முன்தினம் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து இன்று வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்த வழியாக வால்பாறைக்கு, வாகனங்களில் சுற்றுலா செல்லும் பயணியர், தேவையில்லாமல் வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில், வனவிலங்குகளை காண வனப்பகுதிக்குள், சுற்றுலா பயணியர் அத்துமீறி செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். என்று கூறியுள்ளனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
கிட்டம்பாளையம்: குடோன் சாலையில் தேங்கியுள்ள மழை நீர்
Nov 05, 2024, 15:11 IST/கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கிட்டம்பாளையம்: குடோன் சாலையில் தேங்கியுள்ள மழை நீர்

Nov 05, 2024, 15:11 IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்தமலை குழந்தைவேலாயுத சாமி திருக்கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்நிலையில், நேற்று பெய்த கனமழையால் கிட்டம்பாளையம் ராகி குடோன் அருகில் உள்ள சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இந்த நிலை தொடர்ந்தால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் இன்று கவலை தெரிவித்துள்ளனர்.  இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை வாகன ஓட்டிகள் இப்பகுதியில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.