RS புரம்: அடுத்த வருடத்திற்குள் 80% பணிகள் நிறைவடையும்!

50பார்த்தது
கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், முதல்வரின் உத்தரவுக்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார். பழைய அவிநாசி மேம்பாலம், செம்மொழிபூங்கா, பில்லூர் குடிநீர் 3, சாய்பாபா காலணி மேம்பாலம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சாலை பணிகள் ஆகிய பகுதிகள் மற்றும் திட்டப்பணிகளின் நிலையையும் ஆய்வு செய்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். மழைக்காலங்களில் மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவிநாசி மேம்பாலத்தின் கீழ் முன்பு மழைநீர் தேங்கும் நிலை இருந்ததாகவும், தற்போது புதிய மோட்டார் மற்றும் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார். இதேபோல், லங்கா கார்னர் பாலத்தில் புதிய ஜெனரேட்டர் மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார். இறுதியாக, சாக்கடைகளில் ரோபோக்களைக் கொண்டு கழிவுகளை அகற்றுவதற்கு ஐஐடியுடன் இணைந்து பேசி வருவதாக அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி