வால்பாறை - Valparai

வால்பாறை: மலைப்பாதையில் சிறுத்தை உலா!

வால்பாறை: மலைப்பாதையில் சிறுத்தை உலா!

கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி வரும் வழியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே, இரவு நேரத்தில், சிறுத்தை ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதை, சுற்றுலா பயணியர் சிலர் புகைப்படம் எடுத்து நேற்றைய முன்தினம் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து இன்று வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுகின்றன. இந்த வழியாக வால்பாறைக்கு, வாகனங்களில் சுற்றுலா செல்லும் பயணியர், தேவையில்லாமல் வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில், வனவிலங்குகளை காண வனப்பகுதிக்குள், சுற்றுலா பயணியர் அத்துமீறி செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். என்று கூறியுள்ளனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
கோவை: மலை ரயில் போக்குவரத்து ஏழாம் தேதி வரை ரத்து
Nov 05, 2024, 15:11 IST/கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கோவை: மலை ரயில் போக்குவரத்து ஏழாம் தேதி வரை ரத்து

Nov 05, 2024, 15:11 IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், நீலகிரி மாவட்டம் ஆகிய பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லாறு, ஹில்கிரோவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 3 முதல் 5 வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.  தற்போது மீண்டும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வரை பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.