வால்பாறை - Valparai

வால்பாறை: சிறுமி பலி; சிறுத்தையை கண்காணிக்க கேமரா

வால்பாறையில், சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள, ஊசிமலை மட்டம் எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அய்னுார் அன்சாரி, நசீரன்கத்துான் தம்பதி குடும்பத்துடன் தங்கி பணியாற்றுகின்றனர். இவர்களது மகள் அப்சர்கத்துான்(4) கடந்த 19ம் தேதி மதியம், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை சிறுமியை கவ்விச் சென்றது. இதுகுறித்து, வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆறு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை வெளியில் தனியாக விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள புதர்களை எஸ்டேட் நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என நேற்று வனத்துறையினர் உத்தரவைத்துள்ளனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்