ரயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என ஆர்டிஐ மூலம் ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் கேட்டிருந்தது. அதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் சார்பில், "ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்" எனப் பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிக துர்நாற்றம் அடித்தால் அல்லது உணவு கொட்டினால் துவைக்கப்படும். இல்லையெனில் ஒருவர் பயன்படுத்திய போர்வைகள் மடித்து அதே இடத்தில் வைக்கப்படும் என தெரியவந்துள்ளது.