கோவை: ஹாங்காங் சென்றவர் வீட்டில் கொள்ளை
கோவை காட்டூர் அருகே உள்ள ராம் நகர் செங்குத்தா தெருவை சேர்ந்தவர் ராமசுந்தரம். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதன்மை செயல் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ஹரிஹரன். இவர்கள் இருவர் வீடும் அருகருகில் உள்ளது. இருவர் வீட்டுக்குள் செல்ல பொது கதவும் உள்ளது. இந்நிலையில் ஹரிஹரன் சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங் சென்றுவிட்டார். வீடு பூட்டி இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 25) ஹரிஹரன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டதால் ராமசுந்தரம் எழுந்து பார்த்தார். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் கொள்ளையன் அங்கிருந்து பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டான். பீரோவில் இருந்த சில்வர் பொருட்கள், பட்டு சேலைகள் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இது குறித்து வெளிநாட்டில் இருந்த ஹரிகரனுக்கு ராமசுந்தரம் தகவல் தெரிவித்தார். பிறகு காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். கொள்ளையடித்து சென்ற நபரை தேடி வருகிறார்கள்.