கர்நாடகா மாநிலம் கட்டீல் என்ற ஊரில் அமைந்துள்ள துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள அம்பாள் சிவலிங்க வடிவமாக காட்சி அளிக்கிறார். மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்னை நீங்க இத்தல தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். திருமண வரம், குழந்தை வரம் கிடைக்க மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர்.