முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும். இதை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணிவதோடு வழுக்கை ஏற்படுவதையும் தடுக்கும். சளி, காய்ச்சல், இருமல், நீர்க்கோவை, கோழை, சைனஸ் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக முசுமுசுக்கை பயன்படுகிறது. இது உடலில் ரத்தத்தை சுத்தம் செய்கிறது.