காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏவாக இருந்த இவரது மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.