ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு பெண் உட்பட ஐந்து பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருகை புரிந்தனர். படிப்பாதை மூலம் நேற்று (நவ., 27) மலைக்கோயில் சென்ற இவர்கள் ஐந்து அடி பித்தளை வேலை கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். தமிழகத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்த பின் பழனி கோயிலில் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு வின்ச் மூலம் கீழே இறங்கி கரூர் சென்றனர்.