உதகமண்டலம் - Ooty

கோத்தகிரி: மயான பிரச்சனை-போலீசார் விசாரணை

கோத்தகிரி: மயான பிரச்சனை-போலீசார் விசாரணை

கோத்தகிரி பில்லிக்கம்பை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம மக்கள் குறிப்பிட்ட இடத்தை, 40 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர், மயானமாக பயன்படுத்தி வரும் நிலம் தனக்கு சொந்தம் என்றும் குறிப்பிட்ட நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி போலீஸார் கிராம மக்களை அழைத்து நேற்று விசாரணை செய்ததுடன் நிலத்திற்கான ஆவணங்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


நீலகிரி