நீலகிரியில் மீண்டும் மழை ரயில் சேவை தொடங்கியது

64பார்த்தது
இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற  ஊட்டி  மலை   ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் மலை  ரெயிலில் பயணித்தவாறு மேட்டுப்பாளையம் முதல்  ஊட்டி வரை உள்ள அழகிய மலை முகடுகளையும், இயற்கை காட்சிகளையும், வன விலங்குகளையும், வெள்ளியை கரைத்து ஊற்றுவது போல் அழகிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்தவாறு பயணம் செய்து வருகின்றனர்.

இதனிடையே  தற்போது   தீபாவளி  விடுமுறை முதல்  நான்கு நாள்  தொடர் விடுமுறை என்பதால்  மலை  ரெயில் சிறப்பு சேவைகளை தென்னக  ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 12 மற்றும் 13ம் தேதியும் தீபாவளி தொடர் விடுமுறை ஒட்டி இன்று மற்றும் நாளை சிறப்பு ரயில்  இயக்கப்படுகிறது   

அதன்படி  குன்னூரிலிருந்து காலை 8. 20 மணிக்கு  ஊட்டி  வரையிலும், மாலை 4. 45 மணிக்கு  ஊட்டி யிலிருந்து குன்னூர் வரை என இருமுறையும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மன மகிழ்வு பயணமாக  ஊட்டி - கேத்தி இடையே மூன்று முறையும் மலை  ரெயில் இயக்கப்படவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி