உதகமண்டலம் - Ooty

சுற்றுலா மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்

ஓணம் பண்டிகை மற்றும் மிலாடிநபி என தொடர் விடுமுறையை ஒட்டி உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள், உலகப் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். உலக புகழ்பெற்ற யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து வாய்ந்த ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து அடர்ந்த மலைப்பாதை வழியாக குன்னூர் மற்றும் ஊட்டி வரை உள்ள அழகிய மலை முகடுகளையும், இயற்கை காட்சிகளையும், வானுயர்ந்த மலைகளையும், வன விலங்குகளையும், ஆங்காங்கே வெள்ளியை கரைத்து ஊற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்ற வகையில் மலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள குகைகளின் நடுவில் குழந்தை போல் தவழ்ந்து செல்லும் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வீடியோஸ்


நீலகிரி