மூப்பு அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டிய பணியை வேறு ஆசிரியைக்கு நிர்வாகம் பணி வழங்கியதை கண்டித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மாவட்ட ஆட்சியரிடம் வாயிலில் அமர்ந்து தர்ணா.
கணவன் மற்றும் மனைவி இருவரும் கையில் நீதி வழங்க வேண்டும் என பதாகைகளை ஏந்தி போராட்டம்.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த சாம்ராஜ் தேயிலை தோட்டத்தில் இந்த நிர்வாகத்திற்கு சொந்தமான சிவசைலம் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் முதுநிலை ஆசிரியராக சத்தியவதி என்பவர் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் விலங்கியல் ஆசிரியை பணி ஓய்வு பெற்ற நிலையில் அந்த பதவிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக தேர்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தேர்வில் சத்தியவதி மதிப்பெண் பெற்ற நிலையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.