கேரட் விலை 100 முதல்  110 ஆக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

59பார்த்தது
கேரட் கொள்முதல் விலை 100 முதல்  110 ஆக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

கடந்த சில வாரங்களாக ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையான நிலையில் தற்போது100 முதல் 110 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் கேரட் அறுவடையில் விவசாயிகள் தீவிரம்.

நீலகிரி ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆங்கிலேய காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் ஆகும்.

பசுந்தேயிலைக்கு அடுத்தபடியாக  மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டி கேரட்டுக்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருவதால் பெரும்பாலான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தங்களது தோட்டங்களில் கேரட் பயிரிட்டனர் கேரட் பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.

இந்தநிலையில் தற்போது கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட கேரட்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள கேரட்  ரூபாய் 100முதல் 110 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட்  தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது.   இந்த விலை உயர்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி