கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை நகைக்கடை அதிபரிடம் ரூ. 58 லட்சம் மோசடி

கோவை நகைக்கடை அதிபரிடம் ரூ. 58 லட்சம் மோசடி

கோவை பெரிய கடை வீதி கேசி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா (42). நகை கடை நடத்தி வருகிறார். நகை வியாபாரிகளுக்கு மொத்தமாக தங்க நகைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுத்து வருகிறார். இவரிடம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் (40), தீரஜ், சியாம் ஆகியோர் தங்க நகைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி வந்துள்ளனர். இதற்கு அவ்வப்போது சண்முகராஜாவிற்கு பணம் அனுப்பி வந்தனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு முதல் 2023 ஆண்டு ஜூன் மாதம் வரை சண்முகராஜா 69. 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1099 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் 11. 22 லட்சம் ரூபாய் மட்டுமே சண்முகராஜாவிற்கு கொடுத்துள்ளனர். மீதி தொகை ரூ 58 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக சண்முகராஜா நேரில் சென்று அவர்களிடம் கேட்டபோது அவர்கள் பணத்தை தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகராஜா 3 பேர் மீதும் கோவை பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా