கோவாவைப் போல சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடற்கரைகளில் கூடாரங்கள் அமைத்து, மது விற்பனை செய்வதற்கு அனுமதிக்க கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபான விதிகளை தளர்த்தவும், கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிக்கும் நேரத்தை நள்ளிரவு வரை நீட்டிக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த கடற்கரை மது விற்பனை திட்டத்தை எதிர்பார்த்து தென்னிந்திய மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.