கேரள மாநிலம் விழிஞம் கடலில் இருந்து நீரை உறிஞ்சிய மேகங்களின் அரிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல், முன்னதாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதற்கு "டோர்னடோ" என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக அளவில் தோன்றும் என கூறப்படுகிறது.