முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, "இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு இந்த போட்டிகளை மிகப் பிரமாண்டமாக நடத்தி காட்டியுள்ளோம். இந்தியாவில் ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக வீரர்கள் கலந்து கொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்குவதிலும் NO.1 மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு" என்றார்.