கோவை: துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்-போனஸ் அறிவிப்பு

53பார்த்தது
கோவை: துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்-போனஸ் அறிவிப்பு
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி, 8. 33 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென, தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான பேச்சு, கடந்த சனிக்கிழமை நடந்தது. ஒப்பந்த நிறுவனம் தரப்பில் ரூ. 4, 000 தருவதாக கூறியதை, தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. அதனால், 21ம் தேதி (நேற்று) பேச்சு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சில தொழிலாளர்களுக்கு ரூ. 1, 800, சிலருக்கு ரூ. 3, 500 வீதம் வங்கி கணக்கில் வரவானது.

இது, தொழிற்சங்கத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது. துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து, போராட்டத்தில் பங்கேற்றனர். பின், கலெக்டர் கிராந்திகுமாரை, தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் பேச்சு நடந்தது. சட்டப்படி, 8. 33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கத்தினர் மீண்டும் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், புதிய ஒப்பந்தம் கோரும்போது சட்டப்படி போனஸ் வழங்குவதற்கான ஷரத்து சேர்க்கப்படும் என, கமிஷனர் உறுதியளித்துள்ளார். தற்போது 4, 700 ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளனர். இதர கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளி பண்டிகை முடிந்தபின் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி