கிணத்துக்கடவு - Kinathukadavu

பாழாகும் நிலத்தடி நீர்; கிராவல் மண் லாரிகள் சிறைபிடிப்பு

பாழாகும் நிலத்தடி நீர்; கிராவல் மண் லாரிகள் சிறைபிடிப்பு

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கனாங்கொம்பு பகுதியில் அரசு அனுமதியுடன் கிராவல் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கிராவல் மண் எடுப்பதால் தங்கள் கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், எதிர்வரும் தலைமுறையினருக்கு நிலத்தடி நீர் பாழாகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் அப்பகுதி மக்கள். மேலும், அதிக அளவில் லாரிகள் கிராம சாலைகள் வழியாக சென்று வருவதால் சாலை சேதம் அடைவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால், கிராவல் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கிராவல் மண் எடுத்து வந்த லாரிகளை சிறைப்பிடித்து வாக்கனாங்கொம்பு ஊர் மக்கள் நேற்று (செப்.,21) போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த அக்கரை செங்கப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய அனுமதி உள்ளதா என ஒப்பந்ததாரரிடம் ஆவணங்களை சரிபார்த்தனர். இதனையடுத்து, கிராவல் மண் எடுக்கும் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా