கோவை: கோயில் பாதையில் ஆக்ரோஷமாக உலா வரும் காட்டு யானைகள்

63பார்த்தது
கோவையில் கடந்த சில மாதங்களாக மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் படிக்கட்டுகளில் செல்லும் பாதையில் காட்டு யானை முகாமிட்டு, கடந்து சென்றது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அதே போல் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் உலா வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக கோவிலுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் காலை நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் மருதமலை கோவிலில் உள்ள முன்வாயில் கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும், மேலும் அருகில் உள்ள நடை பாதையை முற்றிலுமாக மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேடி உலா வரும் யானைகளை வனத்துறை மற்றும் விவசாயிகள் விரட்டுவதால் எங்கு செல்வது என்று தெரியாமல் இன்று (அக்.,25) காலை பெரிய தடாகம் அனுபவாவி சுப்பிரமணி சாமி கோயிலுக்கு செல்லும் பாதையில் வாலை சுருட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக யானை உலா வந்து கொண்டு உள்ளது.

அங்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடனும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி