குரூப் 2 பணியிடங்களில் கூடுதலாக 213 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2,327 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2,540 பணியிடங்களாக அதிகரித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணைப் பதிவாளர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகளில் நன்னடத்தை அதிகாரி, வனத்துறையில் வனவர், சட்டத்துறையில் உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்கள் உள்ளன.